பாலிவுட் நடிகை கஜோல், “திருமணத்துக்கும் காலாவதி தேதி, புதுப்பித்தல் விருப்பம் இருக்க வேண்டும்” என்று கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் "Too Much with Kajol and Twinkle" நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ட்விங்கிள் கண்ணா, “திருமணத்திற்கு எக்ஸ்பையரி டேட் இருக்க வேண்டுமா?”என்று கேள்வி எழுப்பினார்.
விக்கி கௌஷல், கிருத்தி சனோன், ட்விங்கிள் ஆகியோர் ‘இல்லை’ என்று பதிலளித்த நிலையில்,கஜோல் மட்டும் “ஆம்” எனத் திறம்பட பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கஜோல் கூறியதாவது:“திருமணம் சரியான நேரத்தில் சரியானவரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்டகாலம் துன்பப்பட வேண்டாம். புதுப்பிக்க விரும்பினால் புதுப்பிக்கலாம்.”
ட்விங்கிள்,“இது திருமணம்… வாஷிங் மெஷின் அல்ல!”என்ற நகைச்சுவை குறிப்பைச் செய்தாலும், கஜோல் தனது கருத்தில் உறுதியுடன் இருந்தார்.
மேலும்,“பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?”என்ற கேள்விக்கு விக்கி, ட்விங்கிள் ‘ஆம்’ என்ற நிலையில்,கஜோல் மட்டும் “இல்லை, உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க பணம் தடையாகவும் இருக்கும்”என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, பலரின் பாராட்டும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிடைத்து வருகின்றன.