தொடரும் கிட்னி கொள்ளை... கடனைத் திருப்பிக்கொடுக்க கிட்னியை விற்க நிர்பந்தம்; மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை!
Dinamaalai November 14, 2025 05:48 PM

நாமக்கல் மாவட்டம் ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் (28) என்ற புகைப்படக் கலைஞர், நண்பர்களின் கடன் அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நந்தகோபால், தனது நண்பர்கள் தினேஷ் மற்றும் ஹரியுடன் இணைந்து ஒரு குறும்படத்தை தயாரித்து வந்துள்ளார். இதற்காக அவர் இருவரிடமும் சுமார் 5 லட்சம் ரூபாய் அளவு பணம் கடன் பெற்றிருந்தார். குறும்பட பணிகள் தாமதமானதால், அந்தத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த நந்தகோபாளிடம், தினேஷ் மற்றும் ஹரி தொடர்ந்து கடன் திருப்பிக் கொடுக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்தத் தொகையை திருப்பி அடைக்க முடியாவிட்டால் கிட்னியை விற்று கூட பணத்தை ஏற்பாடு செய்யுமாறு இருவரும் நிர்பந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நந்தகோபால், தனது நிலையைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சம்பவம் வெளிவந்ததும், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட இருவரின் நடவடிக்கைக்கெதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.