ஈர கையுடன் வாஷிங் மெஷினை ஆன் செய்த மூதாட்டி துடிதுடித்து பலி
Top Tamil News November 14, 2025 07:48 PM

புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்ற போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்ட போது மின்சாரம் பாய்ந்து அலறி துடித்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாஷிங் மெஷினை ஆன் செய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.