சமூக வலைத்தளங்களில், ஓர் ஆண் சாலையின் நடுவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அவர் அமர்ந்திருந்த இந்தச் செயலால், பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஒருவரால் படமாக்கப்பட்டுச் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்குக் கீழ் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சிலர், இந்த நபரின் அலட்சியமான கம்பீரத்தைப் (Aura) பார்த்து, “இந்த ‘ஆரா’ 999+ இருக்கும்!” என்றும், “காக்கா செம ஆள்!” என்றும் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
A post shared by @memar_adi.18
மேலும், இதுபோன்ற பொது இடங்களில் போதையில் இதுபோன்ற செயல்களைச் செய்வது தவறு என்றும் பலர் விமர்சித்துள்ளனர். சாலையின் நடுவிலேயே அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடித்துவிட்டு இருக்கலாம் என்று கருதப்படும் அந்த நபர், தனக்கு முன்பாக ஒரு தண்ணீர் பாட்டில், கண்ணாடி டம்ளர், தீப்பெட்டி, மற்றும் ஒரு சிறிய மது பாட்டில் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக அமர்ந்திருக்கிறார்.
அந்த வழியாகப் பலரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்று வந்தாலும், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த யாருக்கும் தைரியம் இல்லை.