Personal Loan-ஐ மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
TV9 Tamil News November 14, 2025 08:48 PM

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பொருளாதார தேவை ஏற்படலாம். அவ்வாறு பொருளாதார தேவைகள் ஏற்படும்போது அவர்கள் வங்கிகள் கடன் வாங்கி தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்யும்போது அதனை மோசடிக்காரர்கள் தவறாக பயன்படுத்தி அவர்களை மோசடி வலையில் விழ வைத்திவிடுகின்றனர். இந்த நிலையில், தனிநபர் கடனுக்கு (Personal Loan) விண்ணப்பிக்கும்போது மோசடி வலையில் விழாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடன்களை மையப்படுத்திய மோசடிகள்

பொதுமக்களின் தனிநபர் கடன்களின் தேவைகளை வைத்து பல வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. அவை குறித்து பார்க்கலாம்.

நம்ப முடியாத கடன் சலுகைகள்

பண்டிகை காலங்கள் உள்ளிட்ட சில சமயங்களில் வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு சில தள்ளுபடிகளை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், நம்பவ முடியாத அளவு குறைந்த வட்டியுடன் கடன், தள்ளுபடி என சலுகைகள் வழங்கப்படும் பட்சத்தில் அது குறித்து கவனமாக இருக்க வேண்டியது நல்லது. காரணம், அது உங்களுக்கு விரிக்கப்படும் மோசடி வலையாக இருக்கலாம்.

இதையும் படிங்க : டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல.. எச்சரிக்கும் செபி.. காரணம் என்ன?

முன்பணம் கோருவது

பொதுவாக வங்கிளில் கடன் பெறும்போது செயலாக்க கட்டணம் (Processing Fees) பிடிக்கப்படும். ஆனால், அந்த கட்டணம் கடன் தொகை வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பிறகு தான் பிடித்தம் செய்யப்படும். அல்லது பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். எனவே வங்கி கணக்கில் பணம் வருவதற்கு முன்னதாகவே செயலாக்க கட்டணம் கோரப்பட்டால் அது மோசடியாக இருக்கலாம்.

ஆர்பிஐ-ல் பதிவு செய்யப்படாத கடன் வழங்குநர்கள்

நீங்கள் வங்கிகளில் கடன் வாங்குகிறீர்களோ அல்லது தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குகிறீர்களோ அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அவை ஆர்பிஐ-ல் பதிவு செய்யப்படவில்லை என்றால் அந்த நிறுவனத்திடம் இருந்து கடன் பெறாதீர்கள்.

இதையும் படிங்க : தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

தனிப்பட்ட தரவுகள் குறித்து கவனம் வேண்டும்

பெரும்பாலான மோசடிக்காரர்கள் பான் கார்டு (PAN Card), ஆதார் கார்டு (Aadhaar Card), ஓடிபி (OTP), மொபைல் தொடர்பு எண்கள் ஆகியவற்றை கோரும். எனவே இவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் உங்களது தகவல்கள் திருடப்பட்டு நீங்கள் தேவையற்ற நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.