யு.பி.எஸ்.சி. 2025 பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாணவர்கள் இந்தாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடும்போது மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 13.97% உயர்ந்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பல்வேறு சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., 2025 பிரதானத் தேர்வு முடிவுகளை அறிவித்தது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 2024-ல் 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது.

முக்கியமாக, மாநில அரசின் இலவச பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. 2024-ல் 48 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 2025-ல் இந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; இது கடந்தாண்டின் 35.29% என்பதையும் மீறியது.நாடு முழுவதும் நடைபெற்ற பிரதானத் தேர்வில் 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!