சென்னையில் பணிபுரிந்த இளம் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் திடீரென உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அண்ணா நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த குஷாஹல் சதுர்வேதி (25), 2020ஆம் ஆண்டு சுங்கத்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது எண்ணூர் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவர், இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தனது நண்பர் மற்றும் சக அதிகாரி புஷ்பன்ட்ராவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் பணியிலிருந்து வீடு திரும்பிய புஷ்பன்ட்ரா, வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததை கவனித்தார். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகம் கொண்ட அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது குஷாஹல் சதுர்வேதி படுக்கையறையில் தூக்குப்போட்டு உயிரிழந்திருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கினர். ஆரம்பக் கணக்கில் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, குஷாஹல் சதுர்வேதி காதல் தோல்வியால் மனமுடைந்து இப்படிப்பட்ட முடிவு எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதைக் குறித்து அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.இளம் அதிகாரியின் மரணம் சுங்கத்துறை ஊழியர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மையான காரணம் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!