அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த முன்னாள் எம்.பியும், அமைப்புச்ச் செயலாளரும் ஆகிய டாக்டர் வா. மைத்ரேயன், கடந்த ஆகஸ்டு மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய பொறுப்பின் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், திமுக நிர்வாகிகள் பலரும் மைத்ரேயனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். திமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்பளிப்பு கிடைத்திருப்பது, அவர் எதிர்காலத்தில் கட்சித் தளத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
மைத்ரேயன் கடந்து வந்த அரசியல் வாழ்க்கை
1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய மைத்ரேயன், அக்கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர், அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
பின்னர் 1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2002ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட அணித் திரள்களில், ஓ.பி.எஸ். தரப்பில் இருந்த மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
2022ஆம் ஆண்டு மீண்டும் ஓ.பி.எஸ். அணியில் இணைந்த அவர், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதம் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் 2024ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவர், இறுதியாக 2025இல் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில், திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது, மைத்ரேயனின் நீண்ட அரசியல் பயணத்தில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!