டெல்லி செங்கோட்டை அருகே 10ஆம் தேதி இரவு நேரத்தில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 27 பேர் பலத்த காயங்களுக்குள்ளானனர். இது சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உறுதி செய்துள்ளது.
கார் வெடிப்பை நிகழ்த்தியவர் தற்கொலைப்படை பயங்கரவாதி டாக்டர் உமர் முகமது என்பதும், அவரது உடலில் இருந்து பெறப்பட்ட திசு மாதிரிகளின் டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அதீல் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் டாக்டர் முசாபர் இந்த சதித் திட்டக்குழுவின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு துருக்கியில் டாக்டர் முசம்மில், உமர் மற்றும் டாக்டர் முசாபர் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசாபர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முதலில் துபாய் சென்ற இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரை கைது செய்வது அவசரமானது என்பதால், காஷ்மீர் போலீசார் இன்டர்போலின் உதவியை உத்தியோகபூர்வமாக கோரியுள்ளனர். அவருக்கு எதிராக *ரெட் கார்னர் நோட்டீஸ்* வெளியிடவும், சர்வதேச அளவில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.
டெல்லியை உலுக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் மேலும் பலர் பிணைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?