பச்சிளங்குழந்தையை புதருக்குள் வீசிய கொடூரம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகள்!
Dinamaalai November 14, 2025 11:48 PM

சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் அதிகளவில் முறைதவறிய உறவில் ஈடுபடும் மாவட்டமாக காஞ்சிபுரம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ள நிலையில், உலகளவில் இந்தியாவில் முறைதவறிய உறவுகளில் ஈடுபடுபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் சரகத்துக்குட்பட்ட அமரசிம்மேந்திரபுரம் அருகே உள்ள ஆத்தங்காடு கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் திடீரென புதருக்குள் இருந்து குழந்தை அழுகை கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, சில மணி நேரங்களுக்கு முன்பு பிறந்து, தொப்புள்கொடியும் அறுக்கப்படாத நிலையில் ரத்தம் காயாத பெண் குழந்தை ஒன்று கிடந்தது.

உடனே அந்த பெண்கள் குழந்தையை மீட்டு உடலை துடைத்து சுத்தம் செய்தனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நேரத்தில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தையை பெற்றுவிட்டு புதருக்குள் துாக்கி வீசிய பெண் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருகிலுள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.