புதிய தமிழ் திரைப்படமான ‘ரஜினி கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரஜினி கிஷன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் திவிகா, முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். எம். ரமேஷ்பாரதி இயக்கியுள்ள இந்த படத்தின் விழாவில் நடிகை திவிகா பேசுகையில் நிகழ்ச்சி நகைச்சுவை களமாக மாறியது.

மலையாளம் பேசும் தன்னை, தமிழ்ப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த திவிகா, படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்தார். “படம் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஹீரோவுடனும் எனக்குமொரு சிறிய புரிதல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு விஷயங்களை தெளிவுபடுத்திக் கொண்டோம். இப்படிப்பட்டவை படப்பிடிப்புகளில் சாதாரணமே,” என்று அவர் கூறினார்.
படத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறியதோ விழாவை மேலும் சிரிப்பில் ஆழ்த்தியது. “ஒரு காட்சியில், சக நடிகர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை தெரியாமல் பிடித்து இழுத்து அறுத்துவிட்டேன். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. படம் ‘ஹிட்’ ஆனால் அவருக்கு புதிய தங்கச் சங்கிலி வாங்கித்தருவேன்!” என்று திவிகா கலகலப்பாக கூற, அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வம் எழுந்துள்ள நிலையில், டிரெய்லர் விழாவில் நடிகை பகிர்ந்த இந்த அனுபவம் படம் வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!