கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தாயிடம் மது குடிக்க பணம் கேட்ட வாலிபர், மறுப்பு கிடைத்ததால் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.பண்ருட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமி (55) எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். தொழில் நஷ்டம் காரணமாக கடையை மூடிய பின்னர், இரண்டு மகன்களுடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தார். கணவர் வேலுச்சாமி 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

பெரிய மகன் விஜய் (28) B.Sc. படிப்பை முடிக்காமல் விட்டு, வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சுழன்றதோடு, மதுபோதைக்கு அடிமையானார். தாயிடம் அடிக்கடி மதுக்காசு கேட்டதால் வீட்டில் தகராறு வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இளைய மகன் ஸ்ரீராம் மனவளர்ச்சி குறைவால் தாயின் பாதுகாப்பில் இருந்தார்.சமீபகாலமாக விஜயின் தொந்தரவு அதிகரித்ததால் ராஜலட்சுமி தன் பெற்றோரிடம் வேலூருக்குச் சென்று தங்கியிருந்தார். அவரை முன்தினம் பிற்பகல் மீண்டும் பண்ருட்டிக்குக் கொண்டு வந்து வைத்தனர்.
அதே இரவு, மதுபோதையில் வீடு திரும்பிய விஜய் மீண்டும் காசு கேட்டார். ராஜலட்சுமி தர மறுத்ததும், ஆத்திரம் கொண்ட அவர் சமையலறையில் இருந்த மைக்ரோ ஓவனை எடுத்துத் தாயின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அதிரடியான தாக்குதலில் ராஜலட்சுமி அங்கேயே ரத்தம் பெருகி உயிரிழந்தார். தொடர்ந்து, பல முறை ஓவனைக் கொண்டு தாக்கி தலையை சிதைத்ததும் வழக்கில் பதிவாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.தாய் கொலைக்குப் பொறுப்பான விஜய் கைது செய்யப்பட்ட நிலையில், மகனே தாயை கொன்ற துயர சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!