புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
Dinamaalai November 15, 2025 01:48 AM

புதுச்சேரி முழுவதும் நாளை நவம்பர் 15ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெறுவதால், பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கும் சூழலை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்தும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதும் டெட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக, நாளை பள்ளிகள் இயங்க வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த சுற்றறிக்கையில், “ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அந்த விடுமுறைகளுக்கான ஈடு நாட்களாக கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 30 ஆகிய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டன. ஏப்ரல் 30ஆம் தேதிக்கான ஈடு நாளாக நாளை சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டெட் தேர்வு காரணமாக நாளை விடுமுறை வழங்கப்படுவதால், அதன் ஈடாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும். அன்று புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாளைய விடுமுறை அறிவிப்பால் புதுச்சேரி பள்ளிகளில் பாடங்கள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.