விஜய் போலவே பல லட்சம் ரசிகர்களை கொண்டவர் அஜித்குமார். அமராவதி துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்து விட்டார். இவரின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். ஆனால் தனக்கு 185 கோடி சம்பளமாக அஜித் கேட்டதால் பல தயாரிப்பாளர்களும் பின் வாங்கினார்கள். ஏனெனில் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி. ஆதிக் ரவிச்சந்திரனும் பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவை தட்டிப் பார்த்தார். அஜித் சம்பளத்தை குறைத்தால் இதுபற்றி பேசலாம் என அவர்கள் சொல்லிவிட படம் தற்போது அப்படியே நிற்கிறது.
ஏற்கனவே ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவரும் அந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்கிறார்கள். எனவே புதிய தயாரிப்பாளரை தேடி அஜித் தரப்பு மும்பையில் வலை வீசி வருகிறார்கள். இந்நிலையில்தான் அஜித்தை பற்றி ஒரு முக்கிய தகவலை சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்துள்ளார். ‘அஜித்தின் பிடிவாதம் பற்றி பலருக்கும் தெரியாது/ போக்கிரி படத்தில் ‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என விஜய் சொல்வார்/ ஆனால் அது அஜித் பேச வேண்டிய வசனம். அவருக்குதான் அது பொருந்தும். அஜித் ஒன்றை முடித்து செய்துவிட்டால் அதிலிருந்து மாறவே மாட்டார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த ஏகன் படம் படுதோல்வி. ஆனாலும் ‘இனிமேல் எனது சம்பளம் 10 கோடி.. யார் 10 கோடி கொடுக்கிறார்களோ. அவர்களுக்குதான் கால்ஷீட் கொடுப்பேன்’ என அறிவித்துவிட்டார் அஜித். ரஜினியின் மகள் சௌந்தர்யா அஜித்தை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவர் தரப்பிடம் பேசி 10 கோடி சம்பளத்திற்கும் ஒப்புக்கொண்டார். ஆனால் ஏகன் பட வியாபாரம் மற்றும் அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்தால் கட்டுப்படி ஆகாது என சிலர் அவரிடம் சொல்ல அதிலிருந்து பின் வாங்கினார். ஆனாலும் அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வரவில்லை.

அடுத்து தயாநிதி அழகிரி அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டு அவரை அணுகி அவர் கேட்ட 10 கோடி சம்பளத்திற்கும் ஒத்துக் கொண்டார். அதுவும் ஒரே தொகையில் 10 கோடி.
இதைக் கேள்விப்பட்ட மற்ற தயாரிப்பாளர்கள் தயாநிதியை தொடர்பு கொண்டு ‘நீங்கள் இப்படி ஒரே தொகையில் 10 கோடி கொடுத்தால் எல்லா நடிகர்களும் அப்படி கேட்பார்கள்.. எங்கள் நிலை என்னாவது?. அதோடு அஜித்துக்கு அவ்வளவு வியாபாரம் எல்லாம் இல்லை’ என்று சொல்ல குழம்பிப் போனார் தயாநிதி. அஜித்திடம் இதைப்பற்றி அவர் மெதுவாக சொல்ல கடுப்பானார் அஜித். அதன்பின் ‘அட்வான்ஸாக 5 கோடி கொடுங்கள். மீதி தொகையை மாதம் இவ்வளவு லட்சம் என என் பேங்க் அக்கவுண்டில் செலுத்தி விடுங்கள்’ என சொல்லித்தான் மங்காத்தா படத்தில் நடித்தார்.மங்காத்தா படத்தை தயாரித்தவர் தயாநிதி.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் ஏகன் படம் முடிந்து மங்காத்தா படம் துவங்க ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. அந்த ஒன்றரை இடைவெளியில் அஜித் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சம்பளத்தையும் குறைக்கவில்லை. அதோடு செலவுக்கு தனது பணத்தையும் அவர் செலவு செய்யவில்லை. ஒரு விநியோகஸ்தரிடம் ‘எனக்கு அடுத்த படம் கமிட் ஆனதும் கொடுத்து விடுகிறேன்’ என சொல்லி அந்த காசைதான் செலவு செய்தார். இதுதான் அஜித்தின் பிடிவாதம். தற்போது தனது சம்பளம் 185 கோடி என முடிவு செய்திருக்கிறார். கண்டிப்பாக அதிலிருந்து பின்வாங்கவே மாட்டார்’ என்கிறார் பிஸ்மி.