Wi-Fi பாஸ்வேர்டு மறந்து விட்டீர்களா.. மிக சுலபமாக ரிட்ரைவ் செய்யலாம்.. எப்படி?
TV9 Tamil News November 15, 2025 03:48 AM

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது வீட்டிலும் வைஃபை (Wifi) வசதி உள்ளது. மொபைல் நெட்வொர்க்கை (Mobile Network) தாண்டி பலரும் தங்களது டிவி, லேப்டாப் ஆகிய கருவிகளுக்காக வைஃபை பயன்படுத்துகின்றனர். வைஃபை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு பாஸ்வேர்டு போடுவது அவசியமாக உள்ளது. அவ்வாறு வைஃபைக்கு பாஸ்வேர்டு பயன்படுத்தபடும் நிலையில், பலரும் பாஸ்வேர்டை மறந்துவிடுவர். பிறகு பாஸ்வேர்டை மீண்டும் ரிட்ரைவ் செவது எப்படி என தெரியாமல் தவிப்பர். அத்தகைய கவலை எதுவும் வேண்டாம். வைஃபை பாஸ்வேர்டை மிக சுலபமாக ரிட்ரைவ் செட்டலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விண்டோசில் வைஃபை பாஸ்வேர்டு தெரிந்துக்கொள்வது எப்படி?

விண்டோசில் பல வழிகளில் வைஃபை பாஸ்வேர்டை ரிட்ரைவ் (Password Retrieve) செய்யலாம். அதில் சில வகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேனல் கண்ட்ரோல்
  • முதலில் நெட்வொர்க் மற்றும் ஷேரிங் செண்ட்ரை திறக்க வேண்டும்.
  • உங்களது வைஃபை பெயரின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் உள்ள வயர்லஸ் பிராப்பர்டீஸ் (Wireless Properties) அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு செக்யூரிட்டி டேபுக்கு (Security Tab) சென்று பிறகு வைஃபை பாஸ்வேர்டை கட்டும் Show Character அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களது வைஃபை பாஸ்வேர்டை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
  • இதையும் படிங்க : ஏஐ இடம் மருத்துவ ஆலோசனைகள் கேட்காதீர்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. காரணம் என்ன?

    கமாண்ட் பிராம்ப்ட் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்
  • முதலில் விண்டோசில் உள்ள கமாண்ட் பிராம்ப்ட் (Command Prompt) அம்சத்தை திறக்க வேண்டும்.
  • பிறகு பதிவு செய்யப்பட்ட நெட்வொர்க்குகளை காண Netsh Wlan Show Profiles என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு நெட்வொர்க் பெயருடன் உங்களது பெயரை சேர்த்து பதிவிட வேண்டும்.
  • இதன் பிறகு உங்களது வைஃபை பாஸ்வேர்டை உங்களால் சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும்.
  • இதையும் படிங்க :பயனர்களை தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிபிடி.. ஒரே வாரத்தில் 7 வழக்குப்பதிவு!

    மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு முறைகளை பின்பற்றி மறந்துப்போன உங்களது வைஃபை பாஸ்வேர்டை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    © Copyright @2025 LIDEA. All Rights Reserved.