Thalaivar173: சைலன்டா வேலை பாத்த சுந்தர்.சி.. ரஜினிக்கும் கமலுக்கும் இது இன்சல்ட்!.. நடந்தது இதுதான்!..
CineReporters Tamil November 15, 2025 03:48 AM


சுந்தர் சி ரஜினி 173 படத்தில் இருந்து விலகியதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. சில பேர் சுந்தர் சி அதிக சம்பளம் எதிர்பார்த்தார் என்றும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் பண்ண வேண்டும் என நினைத்தார். ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை என்பதால்தான் சுந்தர் சி விலகினார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இது எல்லாமே வதந்தி என இன்று வலைப்பேச்சில் கூறியுள்ளார்கள்.

உண்மையில் நடந்தது என்னவெனில், இந்தப் படத்தின் ஒரு ஒன்லைனை கமல்தான் சுந்தர் சியிடம் கூறினாராம். அதை மேற்கொண்டு டெவலெப் செய்து கொண்டு வரும் படி கமல் கூறியிருக்கிறார். சுந்தர் சியும் ஒவ்வொரு முறையும் டெவலெப் செய்து கமலிடம் காண்பிக்க, கமலுக்கு திருப்தி இல்லாமல் தான் இருந்திருக்கிறது. இதில் சுந்தர் சி கொஞ்சம் கடுப்பாகிவிட்டாராம்.

அதனால் அந்த கோபத்தில்தான் இந்த அறிக்கையை வெளியிட்டதாக வலைப்பேச்சில் பேசியிருக்கின்றனர். இதுதான் உண்மையும் கூட. ஏனெனில் ஒரு ப்ராஜக்ட்டில் இருந்து வெளியே வருகிறோம் என்றால் சம்பந்தப்பட்ட புரடியூசர் , ஹீரோவிடம் பேசி சுமூகமான மன நிலையில்தான் வெளியில் போவார்கள். ஆனால் இது அப்படி இல்லை. சுந்தர் சி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இது ராஜ்கமலுக்கே அப்படியொரு அறிக்கை வந்தது தெரியாதாம்.

ரஜினிக்கே இது அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. ரஜினி , கமல் இவர்களின் காதுக்கே கொண்டுபோகாமல்தான் சுந்தர் சி தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் இது சுந்தர் சி கதைதான் என்றும் பேய் சம்பந்தப்பட்ட கதையாகத்தான் எழுதியிருக்கிறார். கமலுக்கு இது ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் கடைசியில் கன்வின்ஸ் ஆனார் என்றும் ரஜினியிடம் போன பிறகுதான் ஒவ்வொரு முறையும் ரஜினி இதில் திருத்தம் செய்து கொண்டே இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

கடைசியில் நேற்றுதான் முழுக் கதையையும் கேட்ட ரஜினி மொத்தத்தில் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் சுந்தர் சியை பயங்கர அப்செட்டில் ஆக்கியிருக்கிறது. என்ன இருந்தாலும் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் இவர்களுக்கு தெரியாமல் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்றால் அவர்கள் இருவருக்கும் இது அவமானமாக இருக்கும் என்றும் வலைபேச்சில் கூறியுள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.