தமிழ்நாடு முழுவதும் நாளை (நவம்பர் 15) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெறுவதையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக, சனிக்கிழமைகளில் சில வகுப்புகளுக்குப் பள்ளிகள் இயங்கும் நிலை இருந்தாலும், தேர்வுகள் நடப்பதன் காரணமாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.