பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்ட சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக-ஜேடியூ கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. பாஜகவில் முக்கிய தலைவர்கள் அனைவரும், தங்களது தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியூ, 85 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் என்டிஏ கூட்டணி 125+ தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 34 இடங்களிலும் பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன்ராஜ் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.