எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து
WEBDUNIA TAMIL November 16, 2025 07:48 AM

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி கண்ட தோல்வி திடுக்கிட செய்வதாக தெரிவித்தார்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

வாக்காளர்களுக்கு நன்றி: பிகார் தேர்தலில் 'இண்டி' கூட்டணிக்கு வாக்களித்து, இந்த கூட்டணி மீது நம்பிக்கை வைத்திருந்த எண்ணற்ற வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வியப்பளிக்கிறது. ஆரம்பம் முதலே நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்காத இந்த தேர்தலில், 'இண்டி' கூட்டணியால் வெற்றி பெற இயலவில்லை.

அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காக 'இண்டி' கூட்டணி தொடர்ந்து போராடி வருகிறது.

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸும், 'இண்டி' கூட்டணியும் ஆராய்ந்து, ஆய்வு செய்து, ஜனநாயகத்தை பாதுகாக்கும் தங்கள் முயற்சிகளை மேலும் திறம்படவும், ஆற்றலுடனும் முன்னெடுத்துச் செல்லும்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.