விக்ரனன் அசோக் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம் நாளை (நவ. 21, 2025) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின், தான் மதுரை மக்களால் காப்பாற்றப்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். “நான் 2012ஆம் ஆண்டு மதுரைக்கு வந்திருந்தபோது கார் விபத்தில் சிக்கினேன்.
அப்போது அந்த இடத்தில் இருந்த உள்ளூர் மக்கள்தான் உடனடியாக என்னை காரில் இருந்து வெளியில் எடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்” என்று அவர் கூறினார்.
“அன்று அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால், இன்று உங்களது அன்புக்குரியவனாக இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டேன். எனது உயிரைக் காப்பாற்றிய மதுரை மக்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் தான் நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், மனிதநேயத்துடன் தன்னை மீட்ட மதுரை மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, படத்தின் புரமோஷனில் இந்தக் கதையைப் பகிர்ந்துள்ளார்.