கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை மீண்டும் தொடங்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, டி.ச. 4 திட்டத்தின் கீழ் சேலத்தில் பரப்புரை நடத்த த.வெ.க. சார்பில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் (SP) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விஜய் பரப்புரை நடத்தக் கோரியுள்ள அந்தச் சமயத்தில், சேலம் பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்குவது குறித்துப் போலீஸ் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் பரப்புரைக்கு அனுமதி கிடைக்குமா, இதன் மூலம் நடிகர் விஜய் தனது அரசியலைத் தீவிரப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.