'எவ்வளவு நாள் தான் சம்பளம் வாங்குறது... நாமளும் சம்பளம் கொடுக்க வேண்டாமா' என்கிற எண்ணம் இப்போது அதிகம் எதிரொலிக்கிறது. அதனால், 'பிசினஸ்' இப்போது பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ஆக மாறிவிட்டது.
ஆனால், பிசினஸ் தொடங்க இந்த எண்ணம் மட்டும் போதாது. இந்த 8 விஷயங்கள் வேண்டும் என்று கூறுகிறார் See Change Consulting நிறுவனர் M.K. ஆனந்த்.
> நம்பர் ஒன், அனைத்து யோசனைகளும் ஒரு ஸ்பார்க்கில் இருந்து தான் ஆரம்பம் ஆகும். அதனால், அந்த ஸ்பார்க்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு, தொடர்ந்து யோசிக்க வேண்டும். இந்த யோசனை பிசினஸ் ஐடியாவிற்கு ஒரு வடிவம் கொடுக்கும்.
> இரண்டாவதாக, இந்த ஐடியா 'நமக்குள் தோன்றிய ஆசையா? அல்லது உண்மையில் அது சாத்தியப்படுமா?' என்பதை ஆராய வேண்டும்.
> அடுத்ததாக, 'பிசினஸ் ஓகே' என்று ஆனவுடன், உங்களது ஐடியாவை பதிவு செய்வது மிக மிக முக்கியம். ஒரிஜினல் ஐடியாவாக இருந்தாலும், மற்றொருவரின் ஐடியாவை காப்பி எடுத்தாலும் இது பொருந்தும்.
> மிக முக்கியமான ஒன்று 'நிறுவனத்தை உருவாக்குதல்'. இது தான் ஐடியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது ஆகும்.
> இப்போது 'சந்தைப்படுத்துதல்'. ஐடியா சக்சஸ் ஆகிவிட்டது... நிறுவனத்தை தொடங்கியாச்சு. இனி தான் உண்மையான வேலையே. உங்களது பொருள் அல்லது சேவையை சந்தைப்படுத்த வேண்டும். இதில் உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய கட்டாயம் மெனக்கெட வேண்டும். இது தான் உங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
> ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இல்லாத போதும், அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால், அதற்கேற்ற மாதிரி நம்பிக்கையான ஆள்களை உங்கள் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளிலும் நியமிக்க வேண்டும்.
பிசினஸ் GST 2.0: ரியல் எஸ்டேட்டிற்கு இனி சூப்பர் எதிர்காலம்; வீடு வாங்கினாலும், கட்டினாலும் லாபம்
> இது மிக மிக கட்டாயம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டும். அதற்கேற்ப உங்களது அடுத்தடுத்த நடவடிக்கை இருக்க வேண்டும்.
> பிசினஸ் எப்போதும் ஒரு புள்ளியில் நின்றுவிடக்கூடாது. அது தொடர்ந்து காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால், அதில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. இதில் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதும் முக்கியம்.
இந்த 'எட்டு' விஷயங்களை பின்பற்றினாலே, பிசினஸில் சிகரத்தை 'எட்டி' விடலாம்".