தமிழகத்தில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு விலை மாற்றங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய உயர்வுக்கு பிறகு மீண்டும் தங்க விலையில் சரிவு பதிவு செய்யப்பட்டதால் சந்தை நிலவரம் மாற்றமடைந்துள்ளது.
நேற்று இரு முறை உயர்ந்து அதிர்ச்சி அளித்த தங்க விலைநேற்று தங்க விலை இரண்டு தடவைகள் உயர்ந்து புதிய சிக்கலை உருவாக்கியது. காலை கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில், பிற்பகலும் அதே அளவு உயர்வு ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200 மற்றும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600க்கும், ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: குட் நியூஸ்! ஒரே நாளில் ரூ.880 க்கு குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....
இந்த அதிர்ச்சி உயர்வுக்கு பின்னர் இன்று காலை தங்கம் விலையில் சிறிதளவு குறைவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500க்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் தங்கம் வாங்க விரும்புவோருக்கு சிறு நிம்மதி அளித்துள்ளது.
வெள்ளி விலையிலும் குறைவுவெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இடையிடையே ஏற்படும் இந்த வேகமான மாற்றங்கள், வருங்கால நாட்களிலும் சந்தை எப்படி இயங்கும் என்பதைக் குறித்து ஆர்வத்தையும் சற்று அச்சத்தையும் உருவாக்கி வருகின்றன.
இதையும் படிங்க: தாறு மாறாக உயரும் தங்கம் விலை! ஒரு சவரன் 95 ஆயிரத்தை கடந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம்...