ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்காக சரணாலயம் அமைக்கும் இத்தாலி!
Dinamaalai December 06, 2025 04:48 PM

கடல் மாசுபாடு உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் டால்பின்களின் வாழிடங்கள் பாதிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் பல கடல் பூங்காக்கள் மூடப்பட்டு வரும் நிலையில், டால்பின்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாகச் சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மனிதர்களின் சிறந்த நண்பனாகக் கருதப்படும் டால்பின்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய தரைக்கடல் பகுதியில் இந்தச் சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் கடந்த 2023-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. சான் பாலோ தீவுக்கு அருகே டரோன்டோ வளைகுடாவில் அமைக்கப்பட்டு வரும் இந்த இயற்கையான சரணாலயத்தின் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததும், இந்தச் சரணாலயம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என இத்தாலி சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.