இன்று இரவுடன் நிறைவு... ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!
Dinamaalai December 06, 2025 08:48 PM

திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள வெள்ளிக் கவசம், கார்த்திகை மாதப் பௌர்ணமியையொட்டிச் சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. கவசமின்றி ஆதிபுரீஸ்வரரைத் தரிசிக்கும் இந்தச் சிறப்பு நிகழ்வின் கடைசி நாளான இன்று இரவுக்குப் பிறகு கவசம் மீண்டும் மூடப்பட உள்ளது.

ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றித் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், முதல் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிவரை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தரிசனத்தின் இரண்டாவது நாளான நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. பெரும்பாலான பக்தர்கள் கோவில் முன்பு விடிய விடியக் காத்திருந்து அதிகாலையிலேயே ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர். இன்று கடைசி நாள் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில், இரவு 8 மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு ஆதிபுரீஸ்வரர் சிலையில் வெள்ளிக் கவசம் மீண்டும் மூடப்படும்.

இந்த மூன்று நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்குப் புனுகு சாம்பிராணி தைல அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை செய்யப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியின்போது பூஜை செய்யப்பட்ட புனுகு சாம்பிராணி தைலம் பிரசித்தி பெற்றது என்பதால், அந்தத் தைலம் அடங்கிய சிறிய டப்பாவை ரூ.20 கட்டணத்தில் கோவில் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.25 மற்றும் ரூ.100 கட்டணங்களைச் செலுத்தி டோக்கன் பெற்றுச் செல்லலாம்.

இந்தச் சிறப்பு தரிசனம் காரணமாகத் திருவொற்றியூருக்கு வரும் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், திருவொற்றியூர் தேரடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.