நள்ளிரவில் கோவாவில் இரவு விடுதியில் தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி பலி!
Dinamaalai December 07, 2025 10:48 AM

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவாவில் வழக்கத்தை விட அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்த வருடம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குவிந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா கடற்கரைப் பகுதியில் செயல்பட்டு வந்த இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கோவாவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீ விபத்து, சமையலறைப் பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், சிலிண்டர் வெடிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் பெரும்பாலும் அந்த விடுதியின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அங்குத் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் நால்வரும் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் லோபோ ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.