இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 'தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு மாமதுரை திருநகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுடன் 56,766 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
முதலீட்டு ஒப்பந்தங்கள்:
மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் மதுரைக்கு வர உள்ளன.

புதிய வேலைவாய்ப்புகள்:
இந்த முதலீடுகள் மூலம் 56,766 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
சிப்காட் பூங்கா அடிக்கல்:
மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் இன்றைய விழாவில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.3,065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை இன்று முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின் கடந்த 4 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் ரூ.8,668 கோடியில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.27,463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையின் வளர்ச்சிக்குப் பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!