இன்று ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோவையில் இருந்து பயணிகளின் வசதிக்காக சென்னைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களின் விவரங்கள்:
1. நாகர்கோவில் - தாம்பரம் இடையே (வண்டி எண் 06012/06011)
நாகர்கோவில் புறப்பாடு (06012): இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடைகிறது.
தாம்பரம் புறப்பாடு (06011): நாளை (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.
2. திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண் 06108/06107)
திருவனந்தபுரம் வடக்கு புறப்பாடு (06108): இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.20 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

சென்னை எழும்பூர் புறப்பாடு (06107): நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடைகிறது.
3. கோவை - எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண் 06024/06023)
கோவை புறப்பாடு (06024): இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்குக் கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடைகிறது.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் புறப்பாடு (06023): நாளை (திங்கட்கிழமை) பகல் 12.20 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 10.30 மணிக்குக் கோவையைச் சென்றடைகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!