சென்னையில் பயங்கரம்... டியூஷன் சென்ற சிறுவனின் முகம், கை, கால்களைக் கடித்துக் குதறிய தெருநாய்!
Dinamaalai December 07, 2025 12:48 PM

சென்னை போரூர் அருகே டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயதுச் சிறுவன் ஒருவனைத் தெருநாய் ஒன்று கடுமையாகக் கடித்துக்குதறிய அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரூர் அருகே தனது அக்காவுடன் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயதுச் சிறுவனைத் தெருநாய் ஒன்று திடீரெனத் தாக்கி, அவனது முகம், கை மற்றும் கால்கள் ஆகிய பகுதிகளில் கடுமையாகக் கடித்துக்குதறியது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தச் சிறுவன், உடனடியாகப் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதேபோல், பூவிருந்தவல்லி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரளாதேவி என்ற பெண் ஒருவரையும் நாய் கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் அண்மைக்காலமாகத் தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.