வடஅமெரிக்கா அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்தின் நடுவில் உள்ள யுகோன் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பல கட்டிடங்களை குலுங்கச் செய்தது, இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் தஞ்சம் ஓடினர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையம் எந்த சுனாமி எச்சரிக்கையையும் விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.