இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் குறித்த அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் தனிப்பட்ட வாழ்வு குறித்த இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாகவும், அனைவரையும் அதேபோல நடந்துகொள்ளுமாறும், இரு குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“>
இந்த முக்கிய முடிவுக்குப் பிறகு, தனது முழு கவனமும் இனி கிரிக்கெட் விளையாட்டிலேயே இருக்கும் என ஸ்மிருதி மந்தனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக விளையாடி மேலும் பல கோப்பைகளை வெல்வதே தனது உயர்ந்த நோக்கம் என்று பதிவிட்டுள்ள அவர், இந்த இலக்கை அடைவதிலேயே தனது சக்தி முழுவதும் இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதன் மூலம், தனிப்பட்ட வாழ்வில் இருந்து விலகி, மீண்டும் நாட்டுக்காகப் பங்களிப்பதில் முழு வீச்சில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது