கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் 3 வயது மகள் கிருத்திஷா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போனார்.
பெற்றோர் கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தனர்.
சிசிடிவி காட்சிகளின்படி, குழந்தை விளையாடிக் கொண்டே அருகிலுள்ள கிணறுப் பகுதிக்குச் செல்வது தெரிந்தது. இதனால், காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இரவு முழுவதும் கிணற்றில் தேடியும், வயல்வெளியில் தேடியும் குழந்தையை மீட்க முடியவில்லை.
ஆனால், அதிகாலையில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் இருந்துச் சுமார் அரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருச் சோளக்காட்டில் இருந்து, அதன் உரிமையாளரால் பத்திரமாகக் குழந்தை மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.