#BREAKING மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
Top Tamil News December 07, 2025 08:48 PM

மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த அரசு பேருந்தும் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி பயணிகளை ஏற்றிக் கொண்டு   சென்ற தனியார் பேருந்தும் கோட்டூர்  என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அக்கம்  பக்கத்தினர்  மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கும்  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது காயமடைந்தோரை  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேரில் பார்த்து ஆறுதல் கூறி வருகிறார் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.