``திருமணம் ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
Vikatan December 08, 2025 12:48 AM

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது.

ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.

இன்ஸ்டா ஸ்டோரி முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஸ்டோரி

இந்த நிலையில், திருமணம் நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா.

அதில், "சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன்.

நான் தனி நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்.

ஸ்மிருதி மந்தனா

இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மிக முக்கியம்.

எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன். இது தான் என்னுடைய லட்சியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.