கார் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் உடல் நசுங்கி பலி!
Dinamaalai December 08, 2025 11:48 AM

சத்தீஸ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தில், காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரு கண்காட்சிக்குச் சென்று விட்டு, நேற்று அதிகாலையில் காரில் வீட்டுக்குத் திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர். பத்ரடோலி என்ற கிராமத்துக்கு அருகில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளமாக முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.