ரஜினியின் 50 ஆவது பொன் விழாவை முன்னிட்டு படையப்பா திரைப்படம் 4கே வெர்சனில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது அப்படியான ஒரு செய்தி வெளியானது. முத்து, அண்ணாமலை, எஜமான் போன்ற திரைப்படங்களை தான் ரஜினியின் பிறந்த நாளின் போது ரீ ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென படையப்பா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இதில் எஜமான் படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்று சொல்லும்போதே பல பேருக்கு என்னடா எஜமான் படத்தையா ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என வருத்தப்பட்டனர். ஏனெனில் எஜமான் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது ஒரு செலிப்ரேஷனான படம் கிடையாது. படத்தின் இரண்டாம் பாதியில் ஐஸ்வர்யா ரஜினியை அடிப்பது மாதிரியான காட்சிகள் இடம் பெறும்.
பிறந்தநாள் செலிப்ரேஷனான படம் என்றால் ஒரு நடிகரின் மாஸான படத்தை தான் ரீ ரிலீஸ் செய்வார்கள். உதாரணத்திற்கு முரட்டுக்காளை ,பாட்ஷா, அண்ணாமலை ,முத்து, வீரா, தளபதி, பேட்ட, எந்திரன் இந்த மாதிரி படங்களை ரீலீஸ் செய்தால் தான் அது கொண்டாடப்பட வேண்டிய படமாக இருக்கும். உதாரணமாக ஆறிலிருந்து அறுபது வரை படத்தை ரீ ரிலீஸ் செய்தால் எவனாவது பார்ப்பானா? ஆனால் உண்மையில் அது ரஜினியின் கெரியரில் ஒரு காவியமாக அமைந்த படம்.
ஆனால் அது ஒரு செலிப்ரேஷன் படமாக இருக்காது. ரசிகர்களை பொருத்தவரைக்கும் ஒரு படத்தை பார்க்கும் பொழுது ஆட்டம் கொண்டாட்டம் இப்படிதான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த டிசம்பர் 12 ரஜினி நடித்த மெகா ஹிட் திரைப்படமான படையப்பா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அதற்கு உண்டான 4k டிஜிட்டல் வெர்ஷன் கூட ரெடி ஆகிவிட்டது.
டிஜிட்டல் வெர்ஷனாக மாற்றுவதற்கு இரண்டு படங்கள் தயாராக இருந்திருக்கிறது. ஒன்று அண்ணாமலை இன்னொன்று படையப்பா .இரண்டு படங்களில் எது முதலில் தயார் ஆகிறதோ அதை ரீ ரிலீஸ் செய்யலாம் என்ற ஐடியாவில் தான் இருந்திருக்கிறார்கள். இதில் ரஜினியின் 50 ஆவது பொன்விழா ஆண்டு என்பதால் இரண்டு படங்களில் எதை போடலாம் என்று பார்க்கும் பொழுது அண்ணாமலையை விட படையப்பா மிகப்பெரிய அளவில் ஹிட்.
அதனால் படையப்பா படத்தையே ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எஜமான் படத்தையும் ரிலீஸ் செய்யலாம் என்ற யோசனையில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு அதனால் எஜமான் படத்தை வேண்டாம் என சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது.