14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்!
Dinamaalai December 10, 2025 04:48 AM

 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 8 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை காணப்படலாம். இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரியும், குறைந்தபட்சம் 24 டிகிரியும் இருக்கும். நாளை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 30 டிகிரியை ஒட்டிய நிலையில் பதிவாகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசலாம். மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்துடன், இடையிடையே 55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.