பிரதமர் நரேந்திர மோடியின் ஓமன் வருகை பெரும் வரவேற்புடன் தொடங்கியது. விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையின் போது, அவரது வலது காதில் இருந்த மின்னும் சிறிய கடுக்கன் போன்ற பொருள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.
அது ஒரு புதிய பேஷன் என்று பலரும் கருதினர். ஆனால், உண்மையில் அது ஒரு நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவி. ஓமனின் அதிகாரப்பூர்வ மொழி அரபு என்பதால், தலைவர்களுடன் சரளமாக உரையாட இந்த தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தினார்.
வர்த்தக ரீதியாக இப்பயணம் மிக முக்கியமானது. இந்தியா மற்றும் ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இந்தியாவின் 98% ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஓமனில் வரி விலக்கு கிடைக்கும். பதிலுக்கு ஓமனின் பேரிச்சம்பழம் மற்றும் மார்பிள் கற்களுக்கு இந்தியா வரிச்சலுகை அளிக்கும்.
Edited by Siva