வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி, வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் அந்த பள்ளியின் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளி பேருந்தின் டிரைவரான தேவேந்திரன் (61) கடந்த சில நாட்களாக பேருந்தில் பயணம் செய்த மாணவிக்கும், அவருடன் அமர்ந்திருந்த தோழிக்கும் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், வீட்டிற்கு சென்று நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேவேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.