ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? அடுத்து என்ன கன்னியாஸ்திரி வேடமா? தமிழச்சி தங்கப்பாண்டியன் விமர்த்த அர்ஜுன் சம்பத்!
Seithipunal Tamil December 19, 2025 11:48 PM

மார்கழி பிறப்பையொட்டி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்டாள் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புகைப்படத்துடன் ஆண்டாள் தொடர்பான திருப்பாவை வரிகளை பகிர்ந்திருந்த தமிழச்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் விமர்சனங்களும் குவிந்துள்ளன. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்போம்! கொசு,டெங்கு, மலேரியா, என பேசி இந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் திமுக MP திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.

திமுக கவிஞர் ஆண்டாள் தாயாரை இழிவு படுத்திய பொழுது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? கம்யூனிஸ்டுகள் மற்றும் திராவிடர் கழக பேச்சாளர்கள் இந்து சமய தெய்வங்களை நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து இழித்து பழித்து கேலி கிண்டல் செய்து அவமதித்து பேசும்பொழுது அமைதி காத்த தமிழச்சி இன்று ஆண்டாள் வேஷம் போடுகிறார்!

விரைவில் முஸ்லிம் பெண்மணி வேடம் அணிந்தும் கன்னியாஸ்திரி கோலத்திலும் தன்னை அலங்கரித்து படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்! இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிப்பார்களா?" என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.