இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. லக்னோவில் நடைபெற இருந்த நான்காவது போட்டி சீறற்ற காலநிலையால் மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக போட்டி ரத்தானது. இன்று ஐந்தாவதும், கடைசியான போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய ஸ்டேடியமான மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டு, பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், அபிசேக் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில், 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் 37 ரன் எடுத்து லிண்டே பந்தில் போல்டானார். அபிசேக் சர்மா 21 பந்தில் 34 ரன் எடுத்து போஸ்ச் பந்தில், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 05 ரன்னில் போஸ்ச் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக்கி மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால், மிடியில் களமிறங்கிய திலக் வர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இதில், திலக் வர்மா 73 ரன் எடுத்தபோது இறுதி ஓவரில் இறுதி பந்தில் ரன் அவுட்டானார். பாண்டியா 25 பந்தில் 63 ரன் எடுத்த நிலையில், பார்ட்மன் பந்தில், ஹென்ட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியில், இந்திய அணி, 20 ஓவரில் 05 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. சிவம் துபே 10 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் அரைசதம் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் இந்திய வீரர்களின் அதிவேக 50கள்.
12 – யுவராஜ் சிங் vs ENG, டர்பன், 2007 WC
16 – ஹர்திக் பாண்டியா vs SA, அகமதாபாத், 2025*
17 – அபிஷேக் சர்மா vs ENG, வான்கடே, 2025
18 – KL ராகுல் vs SCO, துபாய், 2021
18 – சூர்யகுமார் யாதவ் vs SA, கவுகாத்தி, 2022