குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! இந்த தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை..!
Top Tamil News December 24, 2025 12:48 AM

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும், என்னென்ன பொருட்கள் வழங்கப்படுமா? ரொக்கப்பணம் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் மேலோங்கியிருக்கிறது.  


இம்முறை சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் (Pongal Gift) ரொக்கப் பணம் 3000 கொடுக்கப்படும் என்றும், 5000 கொடுக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.  ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு அரசிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொருட்களை கொள்முதல் செய்யும் வேலைகளை தொடங்கிவிட்டன.  

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மிக முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் விரிவாகத் தெரிவிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி மற்றும் சேலைகளை உற்பத்தி செய்யும் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதியன்றே இந்த பொங்கல் வேட்டி, சேலைகள் அனைத்தும் வருவாய்த் துறையினரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கிருந்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். தமிழக அரசின் இந்த முன்னெடுப்பின் மூலம் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகவே ஏழை, எளிய மக்கள் அனைவரும் அரசின் இந்த நலத்திட்டத்தைப் பெற்று பயனடைய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.