நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI முடித்திருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RRB Group D Recruitment 2026| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
| காலியிடங்கள் | 22000 (Approximately) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 20.02.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.rrbapply.gov.in/ |
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது தேர்ச்சி (அல்லது) ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும்.
வயது வரம்பு விவரங்கள் :இந்திய இரயில்வே துறை Group D வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ ST Applicants | 5 years |
| OBC Applicants | 3 years |
| PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
| PwBD (SC/ ST) Applicants | 15 years |
| PwBD (OBC) Applicants | 13 years |
| Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.18000/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறைஇரயில்வே துறை குரூப் D (Group D) வேலைவாய்ப்பு 2026-இன் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் நிலைகள் பின்பற்றப்படும்:
இரயில்வே துறை குரூப் D வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.01.2026 முதல் 20.02.2026 தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/) இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.