இந்தியாவின் இறையாண்மையை விமர்சிக்கும் வங்கதேசம் இந்தியாவிடமே அரிசி கேட்கும் நிலை..!
Seithipunal Tamil December 25, 2025 05:48 PM

இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு முகமது யூனுஸ் அரசில் பலவீனமடைந்து வரும் நிலையில், குறைந்த விலை காரணமாக இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தால் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதை, அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் பிரதமராக இருந்த வரை இந்தியாவுடன் நல்லுறவை பேணி வந்தார். அவருக்கு பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவியேற்றுள்ளார்.

முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், ஹிந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவர், முஸ்லிம் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார் என வதந்தி பரப்பப்பட்டதை, நம்பி ஒரு முஸ்லீம் கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்து தீயிட்டு கொளுத்தினர்.

இந்நிலையில், இருநாடுகளுக்கிடையில் அரசியல் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. இதனையடுத்து வங்கதேசம் இந்தியாவிடம்  அரிசி இறக்குமதிக்கு சார்ந்துள்ளது. 

இதனையடுத்து சமீபத்தில் 50,000 டன் அரிசி இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்வதால் வங்கதேசத்துக்கு, 18 கோடி ரூபாய் மிச்சமாகிறது. உணவு பாதுகாப்பு விஷயத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா எந்த தடையும் விதிக்காமல் அரிசி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.