போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத் சிங் சகோதரர்… தீவிர தேடுதலில் போலீஸ்!
Dinamaalai December 29, 2025 09:48 PM

 

போதைப்பொருள் விற்பனை வழக்கில் சிக்கிய நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2024 ஜூலையில் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் சிக்கிய அவர், மருத்துவ பரிசோதனையில் கொக்கைன் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ஐதராபாத் மாசப் டேங்க் பகுதியில் கடந்த 19ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், நிதின் சிங்கானியா மற்றும் ஷ்ரானிக் சிங்வி என்ற இரு தொழிலதிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 43.7 கிராம் கொக்கைன் மற்றும் 11.5 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அமன் பிரீத் சிங் இவர்களிடம் குறைந்தது ஐந்து முறை போதைப்பொருள் வாங்கிய நிரந்தர வாடிக்கையாளர் என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாசப் டேங்க் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அமன் பிரீத் சிங்கை கைது செய்ய ஈகிள் சிறப்புப் படையுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.