இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம் மனாடோ நகரில் இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்தனர். ஒற்றை மாடி கட்டிடத்தில் முதியவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் வெளியேற முடியாமல் அவர்கள் உள்ளே சிக்கினர்.
தீ விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் மனாடோவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆறு தீயணைப்பு லாரிகளுடன் வந்த வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தீ விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!