ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்தச் சம்பவம் மனித நேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் பகுதியில், ஒரு பெண் பொது இடம் என்றும் பாராமல் அநாகரிகமான முறையில் மலம் கழிக்க முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்தபோது, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பெண் அங்குள்ள பழங்கள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
தன் தவறை மறைப்பதற்காக, தன்னைத் தடுத்த ஊழியர்களை நோக்கி “இனவெறி” (Racism) என்று அந்தப் பெண் கூச்சலிட்டது அங்கிருந்தவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடிப்படைச் சுகாதாரத்தைக் கூடப் பேணாமல், பொதுமக்களின் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்திய அந்தப் பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.