கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சி.எம். நந்தினி. இவர் ஜீவா ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு , நீனாடே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானர்.
அதன்பின்னர், 'கௌரி' என்ற தமிழ்த் தொலைக்காட்சி தொடரில் கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய இந்த நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், நடிகை நந்தினி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில், இன்று தற்கொலை செய்துகொண்டார்.
நந்தினியின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தினியின் தற்கொலை தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், அவர் தனது பெற்றோருக்கு அனுப்பிய தற்கொலை குறிப்பில், தனது விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர் திருமணம் செய்துகொள்ள தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு மனரீதியாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளதாகிட்டவனும், இந்த திருமணத்திற்கு தான் தயாராக இல்லை என்றும் இந்தப் பிரச்னைகள் காரணமாக, தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அவர் தமிழில் நடித்த 'கௌரி' சீரியலில், அவர் சமீபத்தில் விஷம் அருந்துவது தொடர்பான காட்சியில் நடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆன்லைனில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. எனினும், நந்தினியின் திடீர் தற்கொலை, கன்னடம் மற்றும் தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சித் ரசிகர்களைக் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.