பாகிஸ்தானைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஜொரைன் நிஜமானி எழுதிய என்ற தலைப்பிலான கட்டுரை, அந்நாட்டு இளைய தலைமுறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் ஜொரைன், பாகிஸ்தானின் பிரபல திரை நட்சத்திரங்களான ஃபாசிலா காசி மற்றும் கைசர் கான் நிஜமானி ஆகியோரின் மகன் ஆவார்.
மேலும் ஜனவரி 1 அன்று ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ இதழில் வெளியான இந்தக் கட்டுரை, சில மணிநேரங்களிலேயே இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே இது நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தணிக்கை நடவடிக்கையே அக்கட்டுரை சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகக் காரணமாக அமைந்தது.
“>
இது நிஜமானி தனது கட்டுரையில், பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தினர் மற்றும் அதிகார மையங்கள் மீது இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படையாகப் பேசியுள்ளார். திணிக்கப்படும் தேசபக்தி இனி செல்லுபடியாகாது என்றும், சம வாய்ப்பும் பாதுகாப்பும் இருக்கும் இடத்தில்தான் தேசபக்தி இயல்பாக மலரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தின் வளர்ச்சியால் இளைஞர்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளதாகவும், அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி அவர்கள் அமைதியாக நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க நினைக்கும் பாகிஸ்தானிய அதிகார வர்க்கத்திற்கு எதிராக, ஒரு இளைஞனின் இந்த ஆதங்கம் தற்போது தேசிய அளவிலான விவாதமாக மாறியுள்ளது.