டிரைவிங் துறையில் ‘ஆல்ரவுண்டர்’ விருது என்று ஒன்று இருந்தால், அது நிச்சயம் இந்த நபருக்குத்தான் சேரும். ஒரு தொழிற்சாலைப் பகுதியில் சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக லாரி முன்னால் நகரத் தொடங்கியது. அதே சமயம் சிமெண்ட் ஏற்றி வந்த ‘போர்க்லிஃப்ட்’ (Forklift) வாகனமும் பின்னால் நகர, பதறிப்போன டிரைவர் செய்த காரியம் தான் இப்போது வைரல்.
முதலில் ஓடிச் சென்று லாரியின் பிரேக்கை போட்ட அந்த டிரைவர், அடுத்த நொடியே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த தனது போர்க்லிஃப்ட் வாகனத்தை நோக்கிப் பாய்ந்து அதையும் நிறுத்தினார்.
தனது அபாரமான வேகத்தாலும், சமயோசித புத்தியாலும் பெரும் விபத்தைத் தடுத்த இந்த டிரைவரை நெட்டிசன்கள் “நிஜமான ஹீரோ” என்று பாராட்டி வருகின்றனர்.
சுமார் 3 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ள இந்த 53 வினாடி வீடியோ, “டிரைவர்னா இப்படித்தான் இருக்கணும்” என அனைவரையும் சொல்ல வைத்துள்ளது.